கல்வி தொலைக்காட்சி மூலம் பாடம் கற்கிறார்களா? மாணவர்களின் வீடுகளுக்கு சென்று ஆசிரியர்கள் ஆய்வு
கல்வி தொலைக்காட்சி மூலம் பாடம் கற்கிறார்களா? என மாணவர்களின் வீடுகளுக்கு சென்று ஆசிரியர்கள் ஆய்வு செய்தனர்.
சேலம்:
கொரோனா பரவலால் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். மேலும், தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி மூலமும் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவர்கள் பாடம் கற்கிறார்களா? என அவர்களின் வீடுகளுக்கு சென்று ஆசிரியர்கள் ஆய்வு செய்ய கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
இந்தநிலையில் சேலம் செட்டிச்சாவடி அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் வீடுகளுக்கு நேற்று நேரில் சென்றனர். அவர்கள் கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவர்கள் பாடங்கள் கற்கிறார்களா? என ஆய்வு செய்தனர். மேலும் மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர். தொடர்ந்து மாணவர்களுக்கு வீட்டுபாடங்களை வழங்கி, அதனை வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வைக்க அறிவுறுத்தினர்.
Related Tags :
Next Story