குடிசை மாற்று வாரிய வீடுகளை பெற கலெக்டர் அலுவலகத்தில் சமூக இடைவெளியின்றி குவிந்த பொதுமக்கள்
குடிசை மாற்று வாரிய வீடுகளை பெற கலெக்டர் அலுவலகத்தில் சமூக இடைவெளியின்றி ஏராளமானோர் குவிந்தனர்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கீழ்கதிர்பூர் திட்டப்பகுதியில் 2 ஆயிரத்து 112 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு, பயனாளிகளுக்கு வழங்க தயார் நிலையில் உள்ளன. இவற்றில் 1,406 குடியிருப்புகள் வேகவதி நதிக்கரையில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு அவர்களுக்கு பயோமெட்ரிக் முறையில் அடையாள அட்டை வழங்கப்பட்டு விரைவில் வழங்கப்பட உள்ளது.
மீதமுள்ள 706 குடியிருப்புகள் காஞ்சீபுரம் மாவட்டத்தில் வீடு இல்லாதோர், நீர்நிலையில் வசிப்போர்களுக்கு அளிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து அவர்களிடம் இருந்து குடிசை மாற்று வாரிய அலுவலர்கள் மூலம் மனுக்கள் பெறப்படுகிறது.
இதற்கான சிறப்பு முகாம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்காக நேற்று பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன. குடிசை மாற்று வாரியத்தின் 706 வீடுகளுக்கு ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் சமூக இடைவெளியின்றி குவிந்ததால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story