துணி காயப்போடும் போது பால்கனி இடிந்து விழுந்ததில் மூதாட்டி பலி


துணி காயப்போடும் போது பால்கனி இடிந்து விழுந்ததில் மூதாட்டி பலி
x
தினத்தந்தி 5 Aug 2021 11:32 AM IST (Updated: 5 Aug 2021 11:32 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மயிலாப்பூர் , துணி காயப்போடும் போது பால்கனி இடிந்து விழுந்ததில் மூதாட்டி பலியானார்.

சென்னை, 

சென்னை மயிலாப்பூர் பக்தவச்சலம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் பத்மஜா தேவி (வயது 82). குடும்பத்துடன் வசித்து வந்த இவர், நேற்று முன்தினம் வீட்டில் துவைத்த துணியை 2-வது மாடியில் உள்ள பால்கனிக்கு சென்று காயப்போட்டார்.

அப்போது பால்கனி திடீரென இடிந்து விழுந்தது. இதில் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்த மூதாட்டி பத்மஜா தேவி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். உடனடியாக அவரை குடியிருப்புவாசிகள் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மூதாட்டி பத்மஜா தேவி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மயிலாப்பூர் போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story