டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை


டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 5 Aug 2021 7:49 PM IST (Updated: 5 Aug 2021 7:49 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவில்பட்டி:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோடு பழங்குடியினர் காலனியில் வசித்து வந்தவர் கிருஷ்ணசாமி (வயது 28). இவர் நகராட்சியில் குப்பை மினிலாரியில் ஒப்பந்த டிரைவராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி நந்தினி பிரபா (25). திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு மனோஜ் (1½) என்ற ஆண் குழந்தை உள்ளது.
நேற்று காலையில் கிருஷ்ணசாமி மனைவி நந்தினி பிரபாவிடம் தனது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போடுவதற்கு பணம் கேட்டுள்ளார். அதற்கு நந்தினி பிரபா தன்னிடம் பணம் இல்லை, என கூறி உள்ளார். பின்னர் நந்தினி பிரபா குளியலறைக்குள் சென்றார்.

அப்போது கிருஷ்ணசாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் வந்து பார்த்தபோது கிருஷ்ணசாமி பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீசார் விரைந்து வந்து கிருஷ்ணசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story