கிராம மக்களுடன் பஞ்சாயத்து தலைவி ஆர்ப்பாட்டம்


கிராம மக்களுடன் பஞ்சாயத்து தலைவி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Aug 2021 2:24 PM GMT (Updated: 2021-08-05T19:54:29+05:30)

கோவில்பட்டி அருகே கிராம மக்களுடன் பஞ்சாயத்து தலைவி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

கோவில்பட்டி:

கோவில்பட்டியை அடுத்த மூப்பன்பட்டி பஞ்சாயத்து அலுவலகம் முன் அந்த பஞ்சாயத்தின் தலைவி லிங்கேசுவரி தலைமையில் கிராம மக்கள் நேற்று திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பஞ்சாயத்து தலைவர் லிங்கேசுவரி கூறுகையில், ‘மூப்பன்பட்டி பஞ்சாயத்து செயலாளராக பணியாற்றுபவர் சரியாக பணிக்கு வருவதில்லை. பொதுமக்கள் வீட்டுத்தீர்வை வரி செலுத்த வரும்போது, செயலாளர் பணியில் இருப்பதில்லை. பஞ்சாயத்து நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்காத செயலாளரை கண்டித்து வருகிற 9-ந்தேதி கோவில்பட்டி யூனியன் அலுவலகம் முன்பு கிராம மக்களுடன் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக’ தெரிவித்தார்.

Next Story