கோவை ரெயில் நிலையத்துக்கு பிளாட்டினம் விருது
கோவை ரெயில் நிலையத்துக்கு பிளாட்டினம் விருது
கோவை
தென்னிந்திய அளவில் முதலிடம் பெற்ற கோவை ரெயில் நிலையத்துக்கு ‘பிளாட்டினம்’ விருது கிடைத்துள்ளது.
கோவை ரெயில் நிலையம்
சேலம் கோட்டத்தில் அதிக வருவாய் ஈட்டும் ரெயில் நிலையமாக கோவை ரெயில் நிலையம் விளங்கி வருகிறது. 'ஏ1’ அந்தஸ்து பெற்ற இந்த ரெயில் நிலையம் ஐ.எஸ்.ஓ., 9001 தர மேலாண்மை சான்றிதழ், ஐ.எஸ்.ஓ., 14001 சுற்றுச்சூழல், ஐ.எஸ்., 18001 பாதுகாப்பு சான்றிதழ் ஆகிய மூன்றையும் ஏற்கனவே பெற்றுள்ளது.
‘கிரீன் ரேசியோ’ எனப்படும் பசுமை தரம் முனைப்பில் கடந்த, 2018-ம் ஆண்டு முதல், ரெயில்நிலைய வளாகத்தில் சூரியசக்தி மின்சாரம், மழை நீர் சேகரிப்பு, ‘மியாவாக்கி’ முறையில் மரம் நடுதல், 100 சதவீ தம் எல்.இ.டி., விளக்குகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், குட்டி பூங்காக்கள் அமைக்கப்பட்டன.
‘பிளாட்டினம்’ விருது
மேலும், தெற்கு ரெயில்வேயில் முதல் முறையாக, பார்வையற்றோருக்கு ‘பிரெய்லி போர்டு’ நிறுவப்பட்டது. நோயாளிகள், முதியோர் சென்று வர சாய்வு தளம், லிப்ட், எஸ்கலேட்டர்,
பெண்களுக்கு பாதுகாப்பு, தாய்ப்பால் ஊட்டும் அறை என ஏராளமான அம்சங்கள் 2 ஆண்டுக ளில் ஏற்படுத்தப்பட்டன.
அப்போதைய ரெயில்நிலைய இயக்குனர் சதீஸ் சரவணன், வணிக ஆய்வாளர் சிட்டிபாபு, தற்போதைய துணைநிலை வணிக மேலாளர் லாரன்ஸ் உள்ளிட்டோர் அடங்கிய குழு பசுமை தரத்துக்கான கட்ட மைப்பை மேம்படுத்தி,
கடந்த ஆண்டு பசுமை தர சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தது.
அதன் பிரதிபலிப்பாக, இந்தியாவில் ‘பிளாட்டினம்’ சான்றிதழ் பெற்ற 6-வது ரெயில் நிலையமாகவும்,
தெற்கு ரெயில்வேயில் முதல் ரெயில் நிலையம் என்ற பெருமையையும் கோவை ரெயில் நிலையம் பெற்றுள்ளது.
83 புள்ளி
இது குறித்து கோவை ரெயில்நிலைய இயக்குனர் ராகேஷ்குமார் கூறும் போது, ‘‘பயணிகளுக்கான வசதி, சுற்றுச்சூழல் என பல்வேறு கட்ட மைப்புகள் மேம்படுத்தப்பட்டன.
இதன் பலனாக, இந்தியன் கிரீன் பில்டிங் கவுன்சில் ஆய்வுகளின் அடிப்படையில் பசுமை தரத்துக்கு உரியதாக கருதப்படும் ‘பிளாட்டினம்’ சான்றிதழை கோவை ரெயில் நிலையம் பெற்றுள்ளது.
கட்டமைப்பு, ஆரோக்கியம், ஆற்றல், தண்ணீர் மேலாண்மை என 6 பிரிவுகளில் 100-க்கு, 83 புள்ளிகள் பெற்று தேசிய அளவில் இந்த ரெயில் நிலையம் பெருமை சேர்த்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
Related Tags :
Next Story