தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு பிரசார இயக்கம்
தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு பிரசார இயக்கம்
கோவை
உலக தாய்ப்பால் வார விழா ஆகஸ்டு 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது.
இதையொட்டி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் துறை சார்பில் உலக தாய்ப்பால் வார விழா நிகழ்ச்சி கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
விழிப்புணர்வு வாகனத்தில், கோவை அரசு மருத்துவ மனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனை, காந்திபுரம், நவ இந்தியா, சிங்கா நல்லூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இது குறித்து குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் மீனாட்சி கூறுகையில், குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும். 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே தர வேண்டும்.
6-வது மாதத்தில் தாய்ப்பாலுடன் திட உணவை சேர்த்துக் கொள்ளலாம். தாய்ப்பால் புகட்டுவதன் அவசியம் குறித்து வாட்ஸ்- அப் குழு அமைத்து விழிப்புணர்வு மற்றும் கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.
Related Tags :
Next Story