தமிழக நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை 9-ந்தேதி வெளியீடு


தமிழக நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை 9-ந்தேதி வெளியீடு
x
தினத்தந்தி 5 Aug 2021 9:51 PM IST (Updated: 5 Aug 2021 9:51 PM IST)
t-max-icont-min-icon

தமிழக நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை 9-ந்தேதி வெளியீடு.

சென்னை,

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 10 ஆண்டுகளாக நிதி மேலாண்மை மிகவும் மோசமாக இருந்ததாக தி.மு.க. குற்றம் சாட்டி வந்தது. தற்போது தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், நிதி நெருக்கடி நீடிப்பதாக அறிவிக்கப்பட்டது. கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில், தமிழக அரசின் நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை அடுத்து நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கை வெளியிடுவது தொடர்பாக துறை அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆய்வுக்கூட்டங்களை மேற்கொண்டார். கடந்த 10 ஆண்டுகளில் இருந்த வருவாய் பற்றாக்குறை விவரம், கடன் சுமை மற்றும் அரசு செலுத்திய வட்டி தொடர்பான விவரங்கள், தனி நபர் வருமானத்தின் நிலை போன்றவை தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தற்போது தமிழகத்தின் நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. அதை வருகிற 9-ந் தேதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிடுகிறார்.

Next Story