சிறுதானியங்களின் நன்மை குறித்து பாலூட்டும் தாய்மார்களுக்கு விளக்கம்
சிறுதானியங்களின் நன்மை குறித்து பாலூட்டும் தாய்மார்களுக்கு விளக்கம்
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் மலையடிபாளையம் அங்கன்வாடிமையத்தில் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது.
குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சம்ருதா தலைமை தாங்கினார். அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சுப்ரமணியம் முன்னிலை வகித்தார். மேற்பார்வையாளர் கண்மணி கனகராஜம் வரவேற்றார்.
விழாவில், தாய்ப்பாலின் நன்மைகள், குழந்தைகளுக்கு எவ்வளவு நாட்கள் பாலூட்ட வேண்டும் என்பது குறித்து விளக்கப்பட்டது.
மேலும், காய்கறிகள், மாதுளை, ஆப்பிள், பப்பாளி, வாழைப்பழம், சீத்தா போன்ற பழவகைகள், பயிறுவகைகள், சிறு தானியங்கள் பற்றியும் அதன் ஒவ்வொன்றிலும் உள்ள சத்துக்கள், கலோரிகள் குறித்தும், அவற்றை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் கண்காட்சி மூலம் விளக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் வட்டார திட்ட உதவியாளர் சரவணன், வட்டார ஒருங்கிணைப்பாளர் தாமோதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story