உடுமலையை அடுத்த ஒன்பதாறு சோதனைச்சாவடியில் பரிசோதனை தீவிரம் அடைந்துள்ளது.


உடுமலையை அடுத்த ஒன்பதாறு சோதனைச்சாவடியில் பரிசோதனை தீவிரம் அடைந்துள்ளது.
x
தினத்தந்தி 5 Aug 2021 4:27 PM GMT (Updated: 2021-08-05T21:57:35+05:30)

உடுமலையை அடுத்த ஒன்பதாறு சோதனைச்சாவடியில் பரிசோதனை தீவிரம் அடைந்துள்ளது.

தளி
உடுமலையை அடுத்த ஒன்பதாறு சோதனைச்சாவடியில் பரிசோதனை தீவிரம் அடைந்துள்ளது. கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இல்லாதவர்களுக்கு  அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சோதனைச்சாவடி
உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்கள் வழியாக உடுமலையில் இருந்து மூணாறுக்கு செல்வதற்கு சாலை அமைக்கப்பட்டு உள்ளது. 
அதில் செல்கின்ற வாகனங்களை சோதனை இடுவதற்காக ஒன்பதாறு மற்றும் சின்னாறு பகுதியில் வனத்துறை சார்பில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஒன்பதாறு சோதனைச்சாவடியில் உடுமலை வனத்துறையினரும் சின்னார் சோதனைச்சாவடியில் அமராவதி வனத்துறையினரும் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாகன ஓட்டிகளுக்கு பரிசோதனை
இந்த சூழலில் கொரோனா 2-வது அலையை தடுப்பதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக இரண்டு மாநில போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டு உள்ளது. காய்கறிகள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வாகனங்களுக்கு அனுமதிக்கப்படுகிறது.
இந்த நிலையில் கேரள மாநிலத்தில் தொற்று அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து கேரள- தமிழக எல்லையில் அமைந்துள்ள சின்னாறு மற்றும் ஒன்பதாறு சோதனைச்சாவடிகளில் வனத்துறையினர் மற்றும் சுகாதார துறையினர் வாகன ஓட்டிகளுக்கு பரிசோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
நெகட்டிவ் சான்றிதழ்
ஆனைமலை புலிகள் காப்பக உதவி வனப்பாதுகாவலர் க.கணேஷ்ராம் தலைமையில் வனத்துறையினரும் சுகாதாரத்துறையினரும் இணைந்து கேரளாவில் இருந்து வருகின்ற வாகன ஓட்டிகளை பரிசோதித்து வருகின்றனர். அப்போது தெர்மல் ஸ்கேனர் கருவியின் உதவியுடன் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது. 
அதைத்தொடர்ந்து வாகன ஓட்டிகள் 2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டு உள்ளார்களா? நெகட்டிவ் சான்றிதழ் மற்றும் இ-பாஸ் வைத்துள்ளார்களா? எனவும் ஆய்வு செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி சளி, காய்ச்சல் உள்ளிட்ட நோய் தொற்று, நிர்ணயிக்கப்பட்ட அளவை விடவும் உடலில் அதிகமான வெப்பம் மற்றும் சான்றிதழ்கள் இல்லாத வாகன ஓட்டிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இந்த பணியில் வனத்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

Next Story