உடுமலையில் நேற்று மாலை 5 மணிக்கு கடைகள் அடைக்கப்பட்டன.
உடுமலையில் நேற்று மாலை 5 மணிக்கு கடைகள் அடைக்கப்பட்டன.
உடுமலை,
உடுமலையில் நேற்று மாலை 5 மணிக்கு கடைகள் அடைக்கப்பட்டன.
கட்டுப்பாடுகள்
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதை அமல்படுத்தும் பணிகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா 3-வது அலையை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பூர் மாவட்டத்தில் பல கட்டுப்பாடுகளை மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் கொண்டு வந்துள்ளார்.
அதன்படி அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகளான மருந்து கடைகள், பால்கடைகள் தவிர மளிகைக்கடைகள், காய்கறிகடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட அனைத்துகடைகளும் காலை 6 மணி முதல் மாலை5மணிவரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உடுமலை
இதைத்தொடர்ந்து உடுமலையில் நேற்று மாலை 5மணிக்கு பிறகு ஒருசில கடைகள் அடைக்கப்பட்டுவந்தன. இந்த நிலையில் திறந்திருந்த கடைகளை மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல்படி அடைக்கும்படி போலீசார் வீதி வீதியாக சென்று அறிவுறுத்தினர். இதைத்தொடர்ந்து மருந்து கடைகள், பால்கடைகள், ஓட்டல்கள் தவிர மற்ற கடைகள் அடைக்கப்பட்டன. மாலை 5 மணிக்கு பிறகு ஓட்டல்களில் பார்சல்கள் மட்டுமே வழங்கப்பட்டன.
Related Tags :
Next Story