குடிநீர் குழாயை கொண்டு செல்ல மலையை குடைந்து சுரங்கம் தோண்டும் பணி
குடிநீர் குழாயை கொண்டு செல்ல மலையை குடைந்து சுரங்கம் தோண்டும் பணி
காரமடை
குடிநீர் குழாயை கொண்டு செல்ல காரமடை அருகே மலையை குடைந்து சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.
குடிநீர் திட்டம்
கோவை மாநகராட்சியுடன் குறிச்சி, குனியமுத்தூர், கவுண்டம்பாளை யம், ஆகிய நகராட்சிகளும், 7 பேரூராட்சிகள், ஒரு ஊராட்சி ஆகிய பகுதிகள் இணைக்கப்பட்டு உள்ளன.
மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளை உள்ளடக்கிய விரிவாக்க பகுதிகளுக்கு கோவை மாநகராட்சி பில்லூர் 3-வது குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த பணிகள் ரூ.740.15 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நீரேற்று நிலையம், குழாய் அமைக்கும் பணிகள், சுத்திகரிப்பு நிலையம், சுரங்கப் பாதை அமைத்தல் என 3 பிரிவுகளாக பிரித்து பணிகள் ஒப்பந்தம் கோரப்பட்டு உள்ளது.
மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம் மன் கோவில் அருகே சமயபுரத்தில் பவானி ஆற்றில் நீரேற்று நிலையம் அமைக்கும் பணி தொடங்க உள்ளது.
சுரங்கம் தோண்டும் பணி
மருதுார் ஊராட்சிக்கு உட்பட்ட தண்டிகைபெருமாள்புரத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
கட்டாஞ்சி மலையில் ரூ.61.36 கோடி செலவில் ராட்சத குடிநீர் குழாயை கொண்டு செல்லும் பணிகள் நடைபெறுகின்றன.
கட்டாஞ்சிமலையில் 900 மீட்டருக்கு சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெறஉள்ளன. இதுவரை 170 மீட்டர் நீளத்துக்கு மலையைக் குடைந்து சுரங்கம் தோண்டப்பட்டுள்ளது.
இதில் 10 மீட்டர் அகலம், 6 மீட்டர் உயரத்தில் சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெறுகின்றன.
பாறைகளை உடைக்க பயன்படும் எந்திரங்களை கொண்டு பாறைக ளில் துளையிட்டு வெடிவைத்து கற்களை அகற்றி சுரங்கம் அமைக்கும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பிட்ட காலத்திற்குள் குடிநீர் திட்ட பணிகளை முடிக்க குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளும், ஒப்பந்ததாரர்களும் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story