புதிய பஸ்நிலையத்தை வாகன நிறுத்தும் இடமாக மாற்ற வேண்டும்


புதிய பஸ்நிலையத்தை வாகன நிறுத்தும் இடமாக மாற்ற வேண்டும்
x
தினத்தந்தி 5 Aug 2021 10:04 PM IST (Updated: 5 Aug 2021 10:04 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் 25 ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமல் கிடக்கும் புதிய பஸ்நிலையத்தை வாகன நிறுத்தும் இடமாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரி க்கை விடுத்து உள்ளனர்.

வால்பாறை

வால்பாறையில் 25 ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமல் கிடக்கும் புதிய பஸ்நிலையத்தை வாகன நிறுத்தும் இடமாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரி க்கை விடுத்து உள்ளனர். 

வால்பாறை பகுதி 

மலைப்பிரதேசமான வால்பாறையில் பார்த்து மகிழ பல இடங்கள் உள்ளன. மேலும் இங்குள்ள சீதோஷ்ணநிலை மற்றும் இயற்கை அழகை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். 

கொரோ னா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக கடந்த 2-ந் தேதி முதல் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் இங்கு சுற்றுலா பயணிகள் வருவது இல்லை. 

போக்குவரத்து நெரிசல் 

இருந்தபோதிலும் வால்பாறையில் உள்ள மெயின் ரோட்டில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த மெயின் ரோடு பி.ஏ.பி. காலனியில் இருந்து தொடங்கி புதிய பஸ் நிலையம் வரை முடிகிறது. 

ஒரு கி.மீ. தூரம் கொண்ட இந்த சாலையில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதற்கு முக்கிய காரணம், சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்படுவதுதான். 

வாகன நிறுத்தும் இடம் 

இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை நிறுத்த இட வசதி இல்லை. இதனால் அவர்கள் சாலை ஓரத்தில் வாகனங்களை நிறுத்தி வருகிறார்கள். இதுதான் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக இருக்கிறது.

 எனவே வால்பாறை பகுதியில் சுற்றுலா பயணிகள் தங்கள் வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து வால்பாறை பகுதியை சே்ாந்தவர்கள் கூறியதாவது:- 

புதிய பஸ்நிலையம் 

வால்பாறை மெயின் ரோட்டில் ஸ்டேன்மோர் சந்திப்பு, காந்தி சிலை, பழைய பஸ்நிலையம் என்று 3 இடங்களில் பஸ்கள் நிறுத்தப்படுகின்றன. ஒரு கி.மீ. தூரத்துக்குள் இந்த 3 இடங்களிலும் பஸ்கள் நிறுத்துவதால் இதுவும் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக இருக்கிறது. 

இதை பழைய பஸ்நிலையத்தில் மட்டும் பஸ்களை நிறுத்தும் இடமாக மாற்றினால் நெரிசல் ஏற்படுவது தடுக்கப்படும். அதுபோன்று வால்பாறையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு புதிய பஸ்நிலையம் அமைக்கப்பட்டது.

 மழைக்காலத்தில் இந்த பஸ்நிலையத்துக்குள் தண்ணீர் தேங்குவதால் கடந்த 25 ஆண்டுகளாக இந்த பஸ்நிலையம் வீணாகதான் கிடக்கிறது. 

மாற்ற வேண்டும் 

இதை சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாற்றினால், சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்துவதை தவிர்க்கலாம். சுற்றலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கும்போது இங்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விடும்.

எனவே தினமும் இங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க பயன்பாடு இல்லாமல் கிடக்கும் புதிய பஸ்நிலையத்தை வாகன நிறுத்தும் இடமாக மாற்ற, அனைத்துத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 


Next Story