நல்லூர் அருகே ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு
நல்லூர் அருகே ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு
நல்லூர்,
திருப்பூர் மாநகர பகுதிகளில் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதை தடுக்கும் விதமாக மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி ஆகியோர் தலைமையில் உதவி ஆணையாளர் வாசுகுமார், பொறியாளர் கோவிந்தபிரபாகர், சுகாதார அலுவலர் பிச்சை, சுகாதார ஆய்வாளர் கோகுலநாதன் உள்ளிட்டோர் 39-வது வார்டு, ராக்கியப்பாளையம் பிரிவு, வி.ஜி.வி. கார்டன் அருகே உள்ள மகாலட்சுமி நகரில் கடந்த 2012-ம் ஆண்டு குடியிருப்பு பகுதியாக அங்கீகரிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 12.4 சென்ட் (ரிசர்வு சைட்டாக) ஒதுக்கப்பட்டிருந்தது.
அதனை ஆக்கிரப்பு செய்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரியவந்தது. நேற்று சம்பவ இடத்திற்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள் குழு சென்று பார்த்த போது 2 வீடுகள் கட்டப்பட்டிருந்தது. அதனை பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு அகற்றி தரைமட்டம் செய்து சமன் செய்து கம்பி வெளி அமைக்க திட்டமிட்டுள்ளனர்.
Related Tags :
Next Story