சொட்டுநீர் பாசனம் மூலம் முலாம்பழம் சாகுபடி


சொட்டுநீர் பாசனம் மூலம் முலாம்பழம் சாகுபடி
x
தினத்தந்தி 5 Aug 2021 10:10 PM IST (Updated: 5 Aug 2021 10:10 PM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் வட்டாரத்தில் சொட்டுநீர் பாசனம் மூலம் முலாம்பழம் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

சின்னசேலம், 

சின்னசேலம் வட்டாரத்தில் கனியாமூர், பூண்டி, தோட்டப்பாடி ஆகிய கிராமங்களில் மானாவாரி நில மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2020-21-ல் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தில் மாடு, ஆடு, கோழி வளர்ப்பு, மண்புழு உரம் தயாரிப்பு கூடாரம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். மேலும் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த விவசாயிகளிடம் ஒவ்வொரு இனத்திலும் வருமானம் எவ்வாறு அதிகரிக்கிறது என்பதையும் கேட்டறிந்த அவர் மரவள்ளி பயிரில் மாவுப்பூச்சி தாக்குதல்களை கட்டுப்படுத்துவது பற்றி தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் பரிந்துரைப்படி சாகுபடி மற்றும் பராமரிப்பு செய்யும்படி கலெக்டர் கேட்டுக்கொண்டார். 
பின்னர் தோட்டக்கலைத்துறை மூலம் வழங்கப்பட்ட சொட்டுநீர் மற்றும் மல்சிங் சீட் (நிலப்போர்வை) மூலம் பயிரிடப்பட்டுள்ள முலாம்பழ வயல்களை பார்வையிட்ட கலெக்டர் ஸ்ரீதர் பழங்களை சந்தைப்படுத்துதல், வருட உற்பத்தி மற்றும் பராமரிப்பு பற்றியும் கேட்டறிந்தார். அப்போது வேளாண்மை இணை இயக்குனர் சுந்தரம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன், சின்னசேலம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சத்யராஜ், உதவி இயக்குனர்(நடவு பொருள்) உமா, தோட்டக்கலை அலுவலர் பிரியதர்ஷினி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story