பொள்ளாச்சி அருகே விநாயகர் கோவிலில் நகை திருட்டு


பொள்ளாச்சி அருகே விநாயகர் கோவிலில் நகை திருட்டு
x
தினத்தந்தி 5 Aug 2021 4:41 PM GMT (Updated: 2021-08-05T22:11:18+05:30)

பொள்ளாச்சி அருகே விநாயகர் கோவிலில் மர்ம ஆசாமிகள் நகை திருடி சென்றனர். மேலும் கடைகளில் பூட்டு உடைத்து திருட முயற்சி செய்தனர்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே விநாயகர் கோவிலில் மர்ம ஆசாமிகள் நகை திருடி சென்றனர். மேலும் கடைகளில் பூட்டு உடைத்து திருட முயற்சி செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவிலில் திருட்டு  

பொள்ளாச்சி அருக ஆச்சிப்பட்டி சேரன் நகரில் விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் விசாலாட்சி அம்மன் சன்னதி உள்ளது. இந்த நிலையில் கோவில் திறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. 

இதை தொடர்ந்து அம்மன் சன்னதிக்கு சென்ற போது, பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அம்மன் கழுத்தில் கிடந்த 2 கிராம் நகை திருடுபோனது தெரியவந்தது.

போலீசார் விசாரணை 

இதுகுறித்து மகாலிங்கபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில் கோவில் சுற்றுச் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்ற நபர் கைவரிசை காட்டியது தெரியவந்தது. இதேபோன்று அருகில் உள்ள 3 கடைகளில் பூட்டு உடைக்கப் பட்டு இருந்தது. ஆனால் பொருட்கள் எதுவும் திருடுபோக வில்லை என்பது தெரியவந்தது. 

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

இதுகுறித்து போலீசார் கூறுகையில், திருட்டு நடைபெற்ற கோவிலுக்கு வெளியே கண்காணிப்பு கேமரா உள்ளது. ஆனால் பராமரிப்பு இல்லாததால் எதுவும் பதிவாகவில்லை. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறதுஎன்றனர். 


Next Story