காங்கேயம், முத்தூர் பகுதியில் 650 பேருக்கு கொரோனா தடுப்பூசி


காங்கேயம், முத்தூர் பகுதியில்  650 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 5 Aug 2021 10:17 PM IST (Updated: 5 Aug 2021 10:17 PM IST)
t-max-icont-min-icon

காங்கேயம், முத்தூர் பகுதியில் 650 பேருக்கு கொரோனா தடுப்பூசி

காங்கேயம்:
காங்கேயம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பாக கொரோனா பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அரசு பள்ளிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.இந்த நிலையில் நேற்று காங்கேயம் - தாராபுரம் சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 200 பேருக்கும், சாவடிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 150 பேருக்கும், வீரணம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 150 பேருக்கும் மொத்தம் 500 பேருக்கு நேற்று  கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. 
நத்தக்காடையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் அரசு ஆரம்ப பள்ளி வளாகத்தில் நேற்று காலை நடைபெற்றது. முகாமில் சுகாதாரத்துறை மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு நத்தக்காடையூர், பழையகோட்டை, மருதுறை, பரஞ்சேர்வழி ஆகிய 4 ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் என மொத்தம் 150 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி  போட்டனர்.

Next Story