விவசாயிக்கு கொலை மிரட்டல்
விவசாயிக்கு கொலை மிரட்டல் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கமுதி, ஆக.6-
கமுதி அருகே வல்லந்தை பகுதியில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தர்சன்சிங் (வயது55) என்பவர் அவரது குடும்பத்தினருடன் சுமார் 400-க்கு மேற்பட்ட ஏக்கரில் பழத்தோட்டங்கள் வைத்து விவசாயம் செய்து வருகிறார். இதில் மாம்பழம், கொய்யா சப்போட்டா போன்ற பழ மரங்கள் உள்ளன. இந்நிலையில் சிலிப்பி கிராமத்தைச் சேர்ந்த வெற்றிவேல் முருகன் (24) என்பவர் அனுமதி இல்லாமல் பல தோட்டத்திற்குள் நுழைந்து கொய்யா பழங்களை பறித்துள்ளார். இதனை தட்டிக்கேட்ட தர்சன்சிங்கை கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து தப்பி ஓடி விட்டார்.இதுகுறித்து மண்டலமாணிக்கம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வெற்றிவேல்முருகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story