குன்னூரில் ரெயில்வே பகுதிகளில் ஆறுகளை தூர்வாரும் பணி


குன்னூரில் ரெயில்வே பகுதிகளில் ஆறுகளை தூர்வாரும் பணி
x
தினத்தந்தி 5 Aug 2021 5:28 PM GMT (Updated: 5 Aug 2021 5:29 PM GMT)

குன்னூரில் ரெயில்வே பகுதிகளில் ஆறுகளை தூர்வாரும் பணி நடைபெற்றது.

ஊட்டி,

குன்னூரில் பருவமழை காலங்களில் நீரோடைகள், ஆறுகளில் தண்ணீர் அதிகரிப்பதால், அருகே உள்ள சில குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்து வருகிறது. இதனால் அதிகளவில் சேதங்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த 2009-ம் ஆண்டு பலத்த மழை காரணமாக குன்னூர் ரெயில் நிலையத்தின் ஒரு பகுதியில் வெள்ளம் புகுந்ததால் சேதம் ஏற்பட்டது.

 
இதை கருத்தில் கொண்டு மழை காலங்களில் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் குன்னூர் ரெயில் நிலையத்தை ஒட்டி பொக்லைன் எந்திரம் மூலம் ஆறுகளை தூர்வாரி, தடுப்பு சுவர் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

 படிந்து காணப்படும் மண் அகற்றப்பட்டு, மண்சரிவு ஏற்படாமல் இருக்க தடுப்புச்சுவர் அமைக்கப்படுகிறது. இதன் மூலம் ரெயில்வே பகுதிகளில் மழை காலங்களில் வெள்ளம் ஏற்படுவதை தடுக்க முடியும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story