100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடப்பதாக பெண்கள் திடீர் சாலை மறியல்


100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடப்பதாக பெண்கள் திடீர் சாலை மறியல்
x
தினத்தந்தி 5 Aug 2021 5:38 PM GMT (Updated: 2021-08-05T23:08:04+05:30)

பெண்கள் திடீர் சாலை மறியல்

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தொகுதி, நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிக்கனாங்குப்பம் ஊராட்சியில் உள்ள திகுவாபாளையம் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் மாதத்தில் 20 நாட்கள் மட்டுமே பணி வழங்குவதாகவும், அப்படி வழங்கப்படும் பணிக்கு உரிய கூலி தொகையை வழங்குவதில்லை எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி நேற்று காலை வாணியம்பாடி- திம்மாம்பேட்டை சாலையில் திகுவாபாளையம் பஸ் நிறுத்தத்தில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். 

தகவலறிந்து வந்த திம்மாம்பேட்டை போலீசார் மற்றும் நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து மறியல்போராட்டம் கைவிடப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. 


Next Story