புதுப்பாளையத்தில் நடந்த பெண் கொலை வழக்கில் பால் வியாபாரியிடம் விசாரணை


புதுப்பாளையத்தில் நடந்த பெண் கொலை வழக்கில் பால் வியாபாரியிடம் விசாரணை
x
தினத்தந்தி 5 Aug 2021 11:48 PM IST (Updated: 5 Aug 2021 11:48 PM IST)
t-max-icont-min-icon

புதுப்பாளையத்தில் பெண் கொலை வழக்கில் பால் வியாபாரியிடம் விசாரணை

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அருகே புதுப்பாளையம் கிராமத்தில் கடந்த 3-ந் தேதி இரவு அதே பகுதியை சேர்ந்த சாந்தி (வயது 45) என்ற பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து கண்ணமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு கொலையாளியை தீவிரமாக தேடி வந்தனர்.

சாந்தியின் செல்போனை ஆய்வு செய்தபோது கடைசியாக அதே ஊரைச்சேர்ந்த பால்வியாபாரி ஒருவர் சாந்தியுடன் பேசியிருப்பது தெரியவந்தது. அவர் உள்பட சிலரிடம் சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு  பவன்குமார்ரெட்டி சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அப்போது கொலை செய்த குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய, ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன் மற்றும் கண்ணமங்கலம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

Next Story