உரிய நேரத்தில் பணிக்கு வராதவர்கள் மீது நடவடிக்கை


உரிய நேரத்தில் பணிக்கு வராதவர்கள் மீது நடவடிக்கை
x
தினத்தந்தி 6 Aug 2021 12:54 AM IST (Updated: 6 Aug 2021 12:54 AM IST)
t-max-icont-min-icon

உரிய நேரத்தில் பணிக்கு வராதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சாய் சரவணன்குமார் எச்சரிக்கை விடுத்தார்.

புதுச்சேரி, ஆக.6-
உரிய நேரத்தில் பணிக்கு வராதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சாய் சரவணன்குமார் எச்சரிக்கை விடுத்தார்.
திடீர் ஆய்வு
புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணன்குமார் நேற்று காலை நகர்புற வளர்ச்சி துறை அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அலுவலகத்தில் 3 ஊழியர்கள் மட்டுமே இருந்தனர். மற்ற ஊழியர்கள் யாரும் அலுவலக நேரத்திற்கு வரவில்லை. 
அப்போது அமைச்சர் கூறுகையில், கடந்த இரண்டு நாட்களாக எனது சம்பந்தப்பட்ட துறைகளை ஆய்வு செய்து வருகிறேன். அனைவரும் பணிக்கு சரியான நேரத்திற்கு வரவேண்டும் என்று கூறி வருகிறேன். ஆனால் இதனை யாரும் பொருட்படுத்தாமல் பணிக்கு தாமதமாக வருகிறார்கள்.
நடவடிக்கை எடுக்கப்படும்
நீங்கள் மக்களுக்கு முழு அர்ப்பணிப்புடன் சேவை செய்ய வேண்டும். கடமையே என்று வேலைக்கு வரக்கூடாது. எனவே அதிகாரிகள், ஊழியர்கள் அலுவலக நேரத்திற்கு சரியாக பணிக்கு வரவேண்டும். அடுத்தமுறை ஆய்வுக்கு வரும்போது, பணிக்கு தாமதமாக வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். பிறகு அங்கிருந்தவர்களிடம் துறை சார்ந்த விவரங்கள் மற்றும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
_____

Next Story