மருந்து கடையில் பணம் திருட்டு


மருந்து கடையில் பணம் திருட்டு
x
தினத்தந்தி 6 Aug 2021 1:12 AM IST (Updated: 6 Aug 2021 1:12 AM IST)
t-max-icont-min-icon

மருந்து கடையில் பணம் திருட்டு போனது

புதுக்கோட்டை
புதுக்கோட்டை பிருந்தாவனம் அருகே பிரபல மருந்து கடை செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வியாபாரத்தை முடித்து விட்டு கடையை பூட்டி விட்டு ஊழியர்கள் வீட்டுக்கு சென்று விட்டனர். நேற்று காலை அவர்கள் கடையை திறக்க வந்தபோது மருந்து கடையின் கதவில் பூட்டப்பட்டு இருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன.  கடைக்கு உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப் பெட்டியில் வைக்கப்பட்டு இருந்த ரூ.30 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் புதுக்கோட்டை நகர போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அப்போது கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா வயரை மர்ம நபர்கள் அறுத்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story