அரசு பஸ்சில் லாட்டரி சீட்டுகளுடன் வந்த 2 பேர் கைது


அரசு பஸ்சில் லாட்டரி சீட்டுகளுடன் வந்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 6 Aug 2021 1:46 AM IST (Updated: 6 Aug 2021 1:46 AM IST)
t-max-icont-min-icon

உசிலம்பட்டியில் அரசு பஸ்சில் லாட்டரி சீட்டுகளுடன் வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.5¼ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

உசிலம்பட்டி,

உசிலம்பட்டியில் அரசு பஸ்சில் லாட்டரி சீட்டுகளுடன் வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.5¼ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

லாட்டரி சீட்டு விற்பனை

கேரளாவை ஒட்டியுள்ள தமிழக பகுதியான தேனி மாவட்டம், மதுரை மாவட்டத்தின் உசிலம்பட்டி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தொழிலாளர்களை மையப்படுத்தி சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பவர்களை கண்டறிந்து அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவு பிறப்பித்தார்.
இதன் அடிப்படையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டிருந்த ஞானமுருகன் (வயது 55) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தேனியில் இருந்து பஸ் மூலம் லாட்டரி சீட்டுகளை 2 பேர் கொண்டு வருவது தெரிய வந்தது.

2 பேர் கைது

இதையடுத்து உசிலம்பட்டி-தேனி ரோட்டில் மாதரை அருகே உசிலம்பட்டி துணை சூப்பிரண்டு நல்லு ஆலோசனை பேரில் இன்ஸ்பெக்டர் மாரிசாமி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். பஸ்சில் 2 பேரின் பையை பரிசோதித்த போது அதில் கத்தை, கத்தையாக வெளிமாநில ஆன்லைன் லாட்டரி சீட்டுகளும், பணமும் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை பிடித்து விசாரித்தனர்.
இதில் தேனி மாவட்டம், பி.சி.பட்டியை சேர்ந்த முத்தையா மகன் சக்தி ( 39), தேனி என்.ஆர்.டி. நகரை சேர்ந்த சிங்கராஜா மகன் கிருஷ்ணன் (50) ஆகியோர் என ெதரிய வந்தது. அவர்களிடம் இருந்து ரூ.4 லட்சத்து 800 மதிப்பிலான வெளிமாநில லாட்டரி சீட்டுகளையும், ரூ.5¼ லட்சம் ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர். இவர்கள் இருவரும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு லாட்டரி சீட்டுகளை விற்கும் வினியோகஸ்தராக செயல்பட்டு உள்ளனர். இவர்களிடம் யார், யார்? தொடர்பு கொண்டு லாட்டரி சீட்டுகளை வாங்கி இருக்கிறார்கள் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story