மொபட்டில் மணல் கடத்தியவர் மீது வழக்கு


மொபட்டில் மணல் கடத்தியவர் மீது வழக்கு
x
தினத்தந்தி 6 Aug 2021 1:55 AM IST (Updated: 6 Aug 2021 1:55 AM IST)
t-max-icont-min-icon

மொபட்டில் மணல் கடத்தியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலிகருப்பூர் கிராம நிர்வாக அதிகாரி வேல்முருகன் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது கோடாலிகருப்பூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் பிரபாகரன் (வயது 25) அவரது மொபட்டில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி, தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து மொபட்டை பறிமுதல் செய்து விசாரித்து வருகிறார்.

Next Story