அரியலூர், வி.கைகாட்டி, விக்கிரமங்கலம், செந்துறை பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்


அரியலூர், வி.கைகாட்டி, விக்கிரமங்கலம், செந்துறை பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
x
தினத்தந்தி 6 Aug 2021 1:56 AM IST (Updated: 6 Aug 2021 1:56 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர், வி.கைகாட்டி, விக்கிரமங்கலம், செந்துறை பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

அரியலூர்:

பராமரிப்பு பணிகள்
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அரியலூர் உதவி செயற்பொறியாளர் சுப்ரமணியன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அரியலூர் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் மற்றும் கூடுதல் திறன் மின்மாற்றி அமைப்பதற்கான பணிகள் நடைபெற உள்ளன. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் அரியலூரில் ஒரு சில பகுதிகள், கயர்லாபாத், ராஜீவ்நகர், லிங்கத்தடிமேடு, வாலாஜநகரம், வெங்கடகிருஷ்ணாபுரம், அஸ்தினாபுரம், காட்டுப்பிரிங்கியம், பெரிய நாகலூர், மண்ணுழி, புதுப்பாளையம், குறிச்சி நத்தம், சிறுவளூர், பாலம்பாடி, பார்ப்பனச்சேரியில் ஒரு பகுதி, கிருஷ்ணாபுரம், ரெங்கசமுத்திரம், கல்லங்குறிச்சி, மணக்குடி, கடுகூர், கோப்பிலியன்குடிக்காடு, அயன்ஆத்தூர், ஆனந்தவாடி, சீனிவாசபுரம், பொய்யாதநல்லூர், கொளப்பாடி, ஓட்டக்கோவில், கோவிந்தபுரம், மங்களம், தாமரைக்குளம், குறுமஞ்சாவடி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
தேளூர் பகுதியில்...
இதேபோல் தேளூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் பெறும் வி.கைகாட்டி, தேளூர், கா.அம்பாபூர், பாளையக்குடி, காத்தான்குடிகாடு, காவனூர், விளாங்குடி, ஆதிச்சனூர், மணகெதி, நாச்சியார்பேட்டை, நாகமங்கலம், ஒரத்தூர், அம்பவலர் கட்டளை, உடையவர்தீயனூர், விக்கிரமங்கலம், குணமங்கலம், கடம்பூர், ஓரியூர், ஆண்டிப்பட்டாக்காடு, சுண்டக்குடி, வாழைக்குழி, வெளிப்பிரிங்கியம், நெரிஞ்சிக்கோரை, நாக்கியர்பாளையம், மைல்லாண்டகோட்டை ஆகிய பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
நடுவலூர்-செந்துறை
இதேபோல் நடுவலூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் பெறும் சுத்தமல்லி, காசான்கோட்டை, கோட்டியால், கோரைக்குழி, நத்தவெளி, புளியங்குழி, கொலையனூர், சுந்தரேசபுரம், காக்காபாளையம், பருக்கல், அழிச்சுக்குழி ஆகிய பகுதிகளிலும், மற்றொரு துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் குழுமூர், அயன்தத்தனூர், அயன்ஆத்தூர் ஆகிய பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
இதேபோல் செந்துறை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான செந்துறை, இலங்கைச்சேரி, ஆதிகுடிக்காடு, உஞ்சினி, நல்லாம்பாளையம், சிறுகடம்பூர், சோழன்குறிச்சி, ஆனந்தவாடி, சென்னிவனம், ராயம்புரம், அகரம், கட்டையன்குடிக்காடு, மருவத்தூர், சேடக்குடிக்காடு, விழுப்பணங்குறிச்சி, பொன்பரப்பி, சிறுகளத்தூர், மருதூர், வஞ்சினபுரம், நல்லநாயகபுரம், நக்கம்பாடி, மணப்பத்தூர், சோழன்குடிக்காடு, வங்காரம், அயன்தத்தனூர், முல்லையூர், நத்தகுழி, உகந்தநாயகன்குடிக்காடு, பெரியாகுறிச்சி, இலைக்கடம்பூர், நின்னியூர், பிலாக்குறிச்சி, வீராக்கன், செதலவாடி, நாகல்குழி, கீழமாளிகை, மத்துமடக்கி ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9.45 மணி முதல் மாலையில் பணி முடியும் வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என்று செந்துறை உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

Next Story