ஊத்தங்கரை அருகே பழங்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது
ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை தீர்த்தக்கரை வலசை பெரிய ஏரிக்கரை சாலையில் பழம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கல்லாவி
லாரி கவிழ்ந்து விபத்து
கடலூர் பகுதியில் இருந்து கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் பழக்கூழ் ஆலைக்கு கொய்யா பழம் லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. நேற்று அதிகாலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை தீர்த்தகிரி வலசை பெரிய ஏரிக்கரை சாலையில் லாரி வந்து கொண்டிருந்தது. லாரியை போச்சம்பள்ளியை சேர்ந்த பசுபதி (வயது 40) என்பவர் ஓட்டி வந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஏரிக்கரை சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் பசுபதி சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வழக்குப்பதிவு
இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சிங்காரப்பேட்டை போலீசார், காயம் அடைந்த டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story