ஆசிரியையிடம் 7 பவுன் தங்க சங்கிலி பறிப்பு


ஆசிரியையிடம் 7 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 6 Aug 2021 2:06 AM IST (Updated: 6 Aug 2021 2:06 AM IST)
t-max-icont-min-icon

வள்ளியூர் அருகே ஆசிரியையிடம் 7 பவுன் தங்க சங்கிலியை மர்மநபர் பறித்து சென்றார்.

வள்ளியூர்:
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கருத்தப்பிள்ளையூரை சேர்ந்தவர் பரணி குரூஸ் ராஜா. இவரது மனைவி ஜோஸ்பின் ராணி. இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது சொந்த ஊரான நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிகுளத்திற்கு வந்தார். அங்குள்ள கிறிஸ்தவ ஆலய திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். 

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வீட்டின் முன்பு ஜோஸ்பின் ராணி செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக மர்ம நபர் ஒருவர் ஜோஸ்பின் ராணியிடம் முகவரி கேட்பது போல் வந்தார். அந்த நபர் திடீரென்று ஜோஸ்பின் ராணி கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஜோஸ்பின் ராணி வள்ளியூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து மர்ம நபரை வலைவீசி தேடிவருகிறார்கள்.

Next Story