சேலம் மறைமாவட்ட புதிய ஆயர் பொறுப்பேற்பு
சேலம் மறைமாவட்ட புதிய ஆயர் பொறுப்பேற்றார்
சேலம்
சேலம் மறைமாவட்ட ஆயராக இருந்தவர் சிங்கராயன். இவர், ஓய்வு பெற்றதை தொடர்ந்து அவருக்கு பதிலாக மாவட்ட புதிய ஆயராக அருள்செல்வம் ராயப்பன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் சேலம் மரவனேரியில் உள்ள ஆயர் இல்லத்தில் நேற்று மறைமாவட்டத்தின் 5-வது புதிய ஆயராக பொறுப்பேற்று கொண்டார். இவர், மறைமாவட்ட ஆயராகவும், சேலம் கத்தோலிக்க சங்கத்தின் தலைவராகவும் செயல்படுவார். இதையடுத்து கத்தோலிக்க சங்க உதவி தலைவர் அருளப்பன், புதிய ஆயர் அருள்செல்வம் ராயப்பனுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர், சேலம் குழந்தை இயேசு பேராலயத்தின் பங்கு தந்தை ஜோசப் லாசர், மாவட்ட ஆயரும், குழந்தை இயேசு பேராலயத்தின் தலைமை குருவுமான அருள்செல்வம் ராயப்பனிடம் நற்கருணை பேழையின் சாவியை கொடுத்து வாழ்த்தினார். மேலும், புதிய ஆயருக்கு பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகளின் நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில், மறை மாவட்ட பொருளாளர் ஜேக்கப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story