வருகிற 31-ந் தேதி; இஸ்கான் கோவில் நிறுவனரின் பிறந்த நாள் விழா


வருகிற 31-ந் தேதி; இஸ்கான் கோவில் நிறுவனரின் பிறந்த நாள் விழா
x
தினத்தந்தி 6 Aug 2021 2:31 AM IST (Updated: 6 Aug 2021 2:31 AM IST)
t-max-icont-min-icon

இஸ்கான் கோவில் நிறுவனர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட உள்ளது.

பெங்களூரு: பெங்களூரு ராஜாஜிநகரில் உள்ள இஸ்கான் கோவிலின் மூத்த செயல் நிர்வாகி குலசேகர சைதன்ய தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

எங்கள் கோவில் அதாவது சர்வதேச கிருஷ்ண பிரக்ஞா சங்கம் சார்பில் வருகிற 31-ந் தேதி இஸ்கான் கோவில் நிறுவனர் பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரின் 125-வது பிறந்த நாள் விழாவை கொண்டாடுகிறோம். அவர் இந்தியாவில் கலாசாரம், தத்துவம், பரம்பரை காப்பதில் தூதுவராக செயலாற்றினார். 

அமைதி, நிம்மதி, நல்லிணக்கத்தை வெளிநாடுகளில் பரப்ப அவர் தனது 69-வது வயதிலும் அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சென்றார். மனித சமுதாயத்தின் சிறப்புகளை மக்களுக்கு எடுத்துரைத்தார். 100-க்கும் மேற்பட்ட கிருஷ்ணர் கோவில்கள், கல்வி நிலையங்கள், விவசாயிகள் சர்வதேச கூட்டமைப்புகளை உருவாக்கினார். ஆன்மிகம் தொடர்பாக 70-க்கும் மேற்பட்ட புத்தகங்களை அவர் எழுதி வெளியிட்டார். அவரது போதனைகளை அனைவரும் தெரிந்து கொள்வது அவசியம். 
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Next Story