பாளையங்கோட்டையில் கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது


பாளையங்கோட்டையில் கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 6 Aug 2021 2:59 AM IST (Updated: 6 Aug 2021 2:59 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை:
பாளையங்கோட்டை பெருமாள்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி மற்றும் போலீசார் வி.எம்.சத்திரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும்படியாக பையுடன் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் பையில் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில், வி.எம்.சத்திரத்தை சேர்ந்த சக்தி முகேஷ் (வயது 27), வண்ணார்பேட்டையை சேர்ந்த சுந்தர்ராஜ் (24) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Next Story