மணப்பாறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 9½ பவுன் நகை, பணம் திருட்டு


மணப்பாறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 9½ பவுன் நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 6 Aug 2021 12:29 AM GMT (Updated: 2021-08-06T05:59:08+05:30)

மணப்பாறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 9½ பவுன் நகை, பணம் திருட்டுபோனது.

மணப்பாறை, 
மணப்பாறையை அடுத்த பொய்கைப்பட்டி அருகே உள்ள வண்ணாங்குளத்துப்பட்டியைச் சேர்ந்தவர் ராசு (வயது 60). இவர் நேற்று காலை குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்று விட்டார். பேரன் மட்டும் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். இந்தநிலையில் வீட்டின் முன்பக்க கதவில் இருந்த பூட்டை உடைத்த மர்ம நபர்கள் வீட்டிற்குள் சென்று பீரோவை உடைத்து அதில் இருந்த 9 ½ பவுன் நகை மற்றும் ரூ.5,700-ஐ திருடிச்சென்றனர். அப்போது பேரன் தற்செயலாக ஜன்னல் வழியாக பார்த்த போது ஒருவர் வீட்டிற்குள் இருப்பதை அறிந்து சப்தம் போட்டான். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் திருடர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story