திருச்சி மத்திய சிறையில் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் பிரிவில் பணியாற்றிய மோப்பநாய் சாவு; போலீஸ் மரியாதையுடன் அடக்கம்
திருச்சி மத்திய சிறையில் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் பிரிவில் பணியாற்றிய மோப்பநாய் திடீரென இறந்ததது. போலீஸ் மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
திருச்சி,
திருச்சி மத்திய சிறையில் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் பிரிவில் பணியாற்றிய மோப்பநாய் திடீரென இறந்ததது. போலீஸ் மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
மோப்பநாய் சூர்யா
திருச்சி மத்திய சிறையில் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் பணிக்காகவும், போதைப்பொருள் கண்டுபிடிக்கும் பணிக்காகவும் மோப்பநாய் பிரிவு செயல்பட்டு வருகிறது. இதில் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் பணியில் சூர்யா என்ற மோப்பநாயும், போதைப்பொருள் கண்டுபிடிக்கும் பணியில் பினோ என்ற 2 மோப்பநாயும் பணியாற்றி வந்தன.
இதில் மோப்பநாய் சூர்யா கோவையில் 10 மாதகாலம் அடிப்படை பயிற்சியை முடித்துவிட்டு திருச்சி மத்திய சிறையில் பணிக்கு அமர்த்தப்பட்டது. தொடர்ந்து 11 ஆண்டுகள் சிறையில் பணியாற்றி வந்த நிலையில், சூர்யாவுக்கு வாய் புற்றுநோய் ஏற்பட்டது. இதையடுத்து தஞ்சையில் உள்ள கால்நடை பல்கலைக்கழகத்தில் அறுவை சிகிச்சை செய்தும் குணம்அடையவில்லை.
போலீஸ் மரியாதையுடன் அடக்கம்
இந்தநிலையில் நேற்று காலை மோப்பநாய் சூர்யா திடீரென இறந்தது. இதையடுத்து நாயின் உடலை திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு வந்தனர்.
அங்கு சவப்பெட்டியில் வைத்து மோப்பநாய் சூர்யாவின் உடலை ஊர்வலமாக எடுத்து வந்து போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்தனர். இதில் மோப்பநாய்பிரிவு பொறுப்பு அலுவலர் டேவிட், நாய்களை பராமரித்து வந்த அலுவலர்கள் ஜெகதீசன், புண்ணியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டு மோப்பநாய் சூர்யாவுக்கு கண்ணீருடன் விடை கொடுத்தனர்.
Related Tags :
Next Story