திருச்சியில் காவிரி ஆற்றில் குதித்து பஸ் நிறுவன உரிமையாளர் தற்கொலை


திருச்சியில் காவிரி ஆற்றில் குதித்து பஸ் நிறுவன உரிமையாளர் தற்கொலை
x
தினத்தந்தி 6 Aug 2021 12:43 AM GMT (Updated: 2021-08-06T06:13:39+05:30)

திருச்சியில் காவிரி ஆற்றில் குதித்து பஸ் நிறுவன உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சியில் காவிரி ஆற்றில் குதித்து
பஸ் நிறுவன உரிமையாளர் தற்கொலை
திருவெறும்பூர், 
திருச்சியில் காவிரி ஆற்றில் குதித்து பஸ் நிறுவன உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.

பஸ் நிறுவன உரிமையாளர்

திருச்சி உறையூர் நவாபு கார்டன் தெருவை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 72). இவர் தனியார் பஸ் நிறுவன உரிமையாளர். இவரது மனைவி பார்வதி (70). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். அவர்கள் சென்னையில் வசித்து வருகிறார்கள். முத்துசாமி-பார்வதி தம்பதி தனியாக வசித்து வந்தனர்.
 
எவ்வளவோ வசதி இருந்தும் தனக்கு ஆதரவாக தனது குழந்தைகள் இல்லையே என்ற வருத்தத்தில் முத்துசாமி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை வாக்கிங் செல்கிறேன் என்று கூறி ஆட்டோ பிடித்துச்சென்ற முத்துசாமி, திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காவிரி பாலத்தில் வந்து இறங்கியுள்ளார். 

ஆற்றில் குதித்து தற்கொலை

பின்னர் திடீரென காவேரி பாலத்தில் இருந்து காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த திருச்சி தீயணைப்பு துறையினர் காவிரி ஆற்றில் இறங்கி முத்துசாமியின் உடலை தேடியுள்ளனர். ஆனால் உடல் கிடைக்கவில்லை. 

இந்தநிலையில் திருவெறும்பூர் அருகே உள்ள ஒட்டகுடி பகுதியில் முத்துசாமியின் உடல் கரை ஒதுங்கியது. 

 இதைத்தொடர்ந்து திருவெறும்பூர் போலீசார் முத்துசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story