396 அரசு மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் ஒரு வாரத்தில் 4,938 பேருக்கு கொரோனா பரிசோதனை


396 அரசு மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் ஒரு வாரத்தில் 4,938 பேருக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 6 Aug 2021 5:53 AM GMT (Updated: 2021-08-06T11:23:06+05:30)

ஒரு வாரத்தில் 4,938 பேருக்கு கொரோனா பரிசோதனை. பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது.

சென்னை, 

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையில் நாளொன்றுக்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு அலுவலகங்கள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள், பஸ் நிலையங்கள், வணிக வளாகங்கள் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் சுழற்சி முறையில் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.

சென்னையில் 212 அரசு அலுவலகங்களில் பணிபுரியும் 3 ஆயிரத்து 394 நபர்கள், சென்னை மாநகராட்சி மண்டலங்கள், வார்டு மற்றும் தலைமையிடம் உள்ளிட்ட 184 அலுவலகங்களில் பணியாற்றும் 1,544 நபர்கள் என 396 அரசு அலுவலகங்களில் மொத்தம் 4 ஆயிரத்து 938 நபர்களுக்கு கடந்த ஒரு வார காலத்தில் பரிசோதனைகள் மேற்கொள்ள மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இதேபோன்று சென்னையில் 62 மார்க்கெட் மற்றும் வணிக வளாகங்கள் உள்ள இடங்களில் கடந்த ஒரு வார காலத்தில் 8 ஆயிரத்து 763 வணிகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ள மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ள பொதுமக்களும், வியாபார பெருமக்களும் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story