25 டன் நெல் மூட்டைகளுடன் லாரி திருட்டு


25 டன் நெல் மூட்டைகளுடன் லாரி திருட்டு
x
தினத்தந்தி 6 Aug 2021 9:38 AM GMT (Updated: 2021-08-06T15:08:08+05:30)

25 டன் நெல் மூட்டைகளுடன் லாரி திருட்டு.

பெரம்பூர்,

சென்னை கொடுங்கையூர் கவியரசர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 50). லாரி டிரைவரான இவர், நேற்று முன்தினம் இரவு கொருக்குப்பேட்டையில் வெளிமாநிலங்களில் இருந்து சரக்கு ரெயில் மூலம் வந்த 25 டன் நெல் மூட்டைகளை லாரியில் ஏற்றிக்கொண்டார்.

பின்னர் நெல் முட்டைகளுடன் லாரியை எம்.கே.பி. நகர் வடக்கு அவென்யூ சாலை முல்லை நகர் சுடுகாடு அருகே நிறுத்தி விட்டு தனது வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலை வந்து பார்த்தபோது, 25 டன் நெல் மூட்டைகளுடன் நிறுத்தி இருந்த தனது லாரி மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மர்மநபர்கள், கள்ளச்சாவி போட்டு 25 டன் நெல் மூட்டைகளுடன் லாரியை திருடிச்சென்று விட்டது தெரிந்தது. இதுபற்றி எம்.கே.பி. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரித்து வருகின்றனர்.

Next Story