சென்னை விமான நிலைய சரக்கு முனையத்தின் சுங்க இலாகா புதிய முதன்மை கமிஷனர் பொறுப்பேற்பு


சென்னை விமான நிலைய சரக்கு முனையத்தின் சுங்க இலாகா புதிய முதன்மை கமிஷனர் பொறுப்பேற்பு
x
தினத்தந்தி 6 Aug 2021 4:50 PM IST (Updated: 6 Aug 2021 4:50 PM IST)
t-max-icont-min-icon

சென்னை விமான நிலைய சரக்கு முனையத்தின் சுங்க இலாகா புதிய முதன்மை கமிஷனர் பொறுப்பேற்பு.

சென்னை,

மத்திய சுங்கம் மற்றும் மறைமுக வரிகள் வாரியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சென்னை விமான நிலைய சரக்கு முனையத்தின் சுங்க இலாகா புதிய முதன்மை கமிஷனராக நியமிக்கப்பட்ட கே.ஆர்.உதய் பாஸ்கர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர், 1990-ம் ஆண்டு பிரிவு (பேட்ச்) ஐ.ஆர்.எஸ். அதிகாரி ஆவார். மும்பை, சென்னை, மைசூர், திருச்சி மற்றும் கொச்சி ஆகிய இடங்களில் மத்திய மறைமுகவரி மற்றும் சுங்க இலாகாவுக்கு கீழ் இயங்கும் பல்வேறு துறைகளில் அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

சென்னையை அடுத்த கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் தலைமை அதிகாரியாகவும், அமலாக்கத்துறை இயக்குனரகத்தின் சிறப்பு இயக்குனராகவும் பதவி வகித்தவர்.

உதய் பாஸ்கர், கடைசியாக கேரள மாநிலம் கொச்சியில் உள்ள மத்திய கலால் மற்றும் சரக்கு-சேவை வரி முதன்மை கமிஷனராக பணியாற்றினார்.

Next Story