தாய்ப்பால் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனம்- அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்


தாய்ப்பால் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனம்- அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 6 Aug 2021 8:01 PM IST (Updated: 6 Aug 2021 8:01 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் தாய்ப்பால் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனத்தை, அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்த பிரசார வாகனத்தை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

தாய்ப்பால் வார விழா

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் உலக தாய்ப்பால் வார நிறைவு விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்த பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் கீதாஜீவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரசார வாகனம்

உலக தாய்ப்பால் வார விழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 1-ந் தேதியில் இருந்து 7-ந் தேதி வரை கொண்டாடப்படுகிறது. சமூக நலத்துறை சார்பில் அங்கன்வாடி மையங்களில் கர்ப்பிணி தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள், 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வளர்க்கும் தாய்மார்களை தனியாக சந்தித்து தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து விளக்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் தனியாக பிரசார வாகனம் மூலம் பிரசாரம் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் தாய்ப்பாலின் அவசியம் குறித்து தாய்மார்களுக்கு விளக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் நேரு, உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி, மருத்துவமனை கண்காணிப்பாளர் குமரன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தனலட்சுமி, தாசில்தார் ஜஸ்டின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ரேஷன் கடை

தூத்துக்குடி கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் மாப்பிள்ளையூரணி நகர கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் அலங்காரத்தட்டில் முழுநேர ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் 1,146 ரேஷன்கார்டுதாரர்கள் பொதுவினியோக திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்களை பெற்று வருகின்றனர். இந்த ரேஷன் கடைக்கு தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது.
இந்த கட்டிடம் திறப்பு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சிவகாமி தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல்காசீம், கூட்டுறவு துணைப்பதிவாளர்கள் ரவிந்திரன், மாரியப்பன், கூட்டுறவு சார்பதிவாளர்கள் ஜோ சில்வஸ்டர், கிருஷ்ணன், சூரியா, வட்டவழங்கல் அலுவலர் வதனாள் மற்றும் மாப்பிள்ளையூரணி நகர கூட்டுறவு கடன் சங்க தலைவர் சரவணகுமார், சங்க செயலாளர் பாலமுருகன் மற்றும் சங்கப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story