வகுத்துப்பட்டி கிராமத்தில் செல்போன் கோபுரம் அமைக்க பொது மக்கள் எதிர்ப்பு


வகுத்துப்பட்டி கிராமத்தில் செல்போன் கோபுரம் அமைக்க பொது மக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 6 Aug 2021 9:02 PM IST (Updated: 6 Aug 2021 9:02 PM IST)
t-max-icont-min-icon

வகுத்துப்பட்டி கிராமத்தில்செல்போன் கோபுரம் அமைக்க பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தர்மபுரி:
தர்மபுரி அருகே கிருஷ்ணாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வகுத்துப்பட்டி கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 2019-ம் ஆண்டு இந்த பகுதியில் தனியார் நிலத்தில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொது மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்ததால் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று மீண்டும் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதை பார்த்த பொது மக்கள் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அவர்களை திருப்பி அனுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story