மக்களை தேடி மருத்துவம் திட்டம்- ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
ஸ்ரீவைகுண்டம் அருகே, மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை, ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆறாம்பண்ணை பஞ்சாயத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்ட தொடக்க விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட ஊரக முகமை திட்ட இயக்குனர் சரவணன் தலைமை தாங்கினார். சமூக நல பாதுகாப்பு திட்ட தாசில்தார் ரமேஷ், சுகாதார துணை இயக்குனர் போஸ்கோ ராஜா, ஆறாம்பண்ணை பஞ்சாயத்து தலைவர் சேக் அப்துல் காதர், வல்லநாடு அரசு சித்த மருத்துவர் செல்வகுமார், கருங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாக்கிய லீலா, செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் கலந்துகொண்டு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
நிகழ்ச்சியில் வட்டார காங்கிரஸ் தலைவர்கள் நல்லகண்ணு (ஸ்ரீவைகுண்டம்), புங்கன் (செய்துங்கநல்லூர்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story