வத்தலக்குண்டு அருகே 22 கிலோ கஞ்சாவுடன் தந்தை, மகன் கைது
வத்தலக்குண்டு அருகே தோட்டத்தில் 22 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர்.
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு அருகே விருவீடு ஊராட்சிக்கு உட்பட்ட சந்தையூர் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன், விருவீடு சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று அங்கு ரோந்து சென்றனர்.
அப்போது அதே ஊரை சேர்ந்த பெரியகருப்பன் (வயது 45) என்பவரது தோட்டத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் கஞ்சாவை பெரியகருப்பனும், அவரது மகன் ராஜாவும் (23) விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெரியகருப்பன் மற்றும் ராஜாவை கைது செய்தனர்.
Related Tags :
Next Story