பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

உத்தமபாளையம் தாலுகாக அலுவலகம் முன்பு பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி :
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கம்பம் ஒன்றிய செயலாளர் மகேஸ்வரன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஒரு சமூகத்தினருக்கு மட்டும் வழங்கிய 10.5 சதவீத இடஒதுக்கீட்டை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும். டி.என்.டி. மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். முன்னதாக பைபாஸ் பஸ் நிறுத்தத்தில் இருந்து ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story