கல்லட்டி மலைப்பாதையில் கார் கவிழ்ந்தது
கல்லட்டி மலைப்பாதையில் கார் கவிழ்ந்தது.
ஊட்டி,
ஊட்டி அருகே தலைகுந்தாவில் இருந்து மசினகுடி செல்லும் கல்லட்டி மலைப்பாதை 36 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. அபாயகரமான பாதை என்பதால் முதல் மற்றும் 2-வது கியரில் வாகனங்களை இயக்க வேண்டும் என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.
இந்த பாதை வழியாக பிற மாநில, பிற மாவட்ட பதிவு எண் கொண்ட வாகனங்கள் ஊட்டியில் இருந்து கீழே செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று ஊட்டியில் இருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக மசினகுடிக்கு கார் ஒன்று சென்றது. 34-வது கொண்டை ஊசி வளைவில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவே தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
காரில் சென்ற டிரைவர் உள்பட 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் கார் மீட்கப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story