தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை


தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 6 Aug 2021 10:20 PM IST (Updated: 6 Aug 2021 10:20 PM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே வெவ்வேறு பகுதிகளில் தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

தேனி: 


தேனி அருகே பழனிசெட்டிபட்டி பாலாஜி நகரை சேர்ந்தவர் சிங்கத்துரை பாண்டியன் (வயது 50). கூலித்தொழிலாளி. இவருக்கு சில ஆண்டுகளாக சர்க்கரை நோய் பாதிப்பு இருந்து வந்தது. 

அதற்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார். இதனால், மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் வடபுதுப்பட்டி சுப்பிரமணிய கோவில் தெருவை சேர்ந்தவர் அழகர்சாமி (76). இவருக்கும், அன்னஞ்சியை சேர்ந்த சந்திரபோஸ் என்பவருக்கும், நிலப்பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதன் காரணமாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. 

இதில் மனமுடைந்த அழகர்சாமி, தோட்டத்தில் இருந்த ஒரு மரத்தில் நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அல்லிநகரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முகமது யாகியா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story