டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மனு
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மனு கொடுக்கப்பட்டது.
பரமக்குடி,
பரமக்குடி பஸ் நிலையம் அருகே மாதவன் நகர் செல்லும் பகுதியில் குடியிருப்பு வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், வணிக கடைகள், உணவகங்கள் உள்ளன. இந்தநிலையில் அங்கு டாஸ்மாக் கடை இருப்பதால் தினமும் ஏராளமான குடிமகன்கள் குடித்து விட்டு குடிபோதையில் அந்தபகுதியில் தகராறு செய்கின்றனர். போதை தலைக்கேறியதும் அங்கேயே நடுவழியில் படுத்து விடுகின்றனர். மேலும் குடிமகன்களின் கூட்டம் அதிகமாக இருப்பதால் அந்த பகுதியில் பெண்கள் செல்வதற்கே அச்சப்படுகின்றனர். எனவே அங்குள்ள டாஸ்மாக் கடை மற்றும் பாரை அகற்றக்கோரி பரமக்குடி நகர் த.மு.மு.க. மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நகர் தலைவர் ஷேக் அப்துல்லா தலைமையில் மாவட்ட செயலாளர் சிந்தா மதார், மாவட்ட பொருளாளர் மாவட்ட துணைச்செயலாளர் சகாபுதீன் மாவட்ட எம்.டி.எஸ். செயலாளர் சுலைமான், தொண்டரணி செயலாளர் அப்துல் ரசூல், மருத்துவ சேவை அணி செயலாளர் முகம்மது ஹாலிப், ம.ம.க.நகர் செயலாளர் முகம்மது ஷஜீத், நகர்பொருளாளர் அப்துல்லா உள்பட வியாபாரிகள் சென்று பரமக்குடி தாசில்தார் தமிழ் ராஜாவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
Related Tags :
Next Story