9 தாசில்தார்கள் பணி இடமாற்றம்


9 தாசில்தார்கள் பணி இடமாற்றம்
x
தினத்தந்தி 6 Aug 2021 5:02 PM GMT (Updated: 2021-08-06T22:32:08+05:30)

தேனி மாவட்டத்தில் 9 தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

தேனி:  

தேனி மாவட்டத்தில் நிர்வாக காரணங்களுக்காக தாசில்தார்கள் 9 பேர் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் முரளிதரன் பிறப்பித்தார். 

அதன்படி, தேனி தேசிய நெடுஞ்சாலை நிலம் எடுப்பு தனி தாசில்தார் அர்ச்சுணன் உத்தமபாளையம் தாசில்தாராகவும், உத்தமபாளையம் தாசில்தார் உதயராணி உத்தமபாளையம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், உத்தமபாளையம் தனி தாசில்தார் திருமுருகன் ஆண்டிப்பட்டி தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 


ஆண்டிப்பட்டி தாசில்தார் சந்திரசேகரன் மதுரை முத்திரைத்தாள் தனித்துணை கலெக்டர் அலுவலக தனி தாசில்தாராகவும், சின்னமனூர் நகர நிலவரித்திட்ட தனி தாசில்தார் அழகுமணி தேனி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், தேனி தனி தாசில்தார் யசோதா மாவட்ட கலெக்டர் அலுவலக மேலாளராகவும் (குற்றவியல்) மாற்றப்பட்டனர். 


மாவட்ட கலெக்டர் அலுவலக மேலாளர் சரவணபாபு தேனி தாசில்தாராகவும், தேனி சிப்காட் நிலம் எடுப்பு தனி தாசில்தார் அப்துல்நசீர் தமிழ்நாடு வாணிபக் கழக கிடங்கு மேலாளராகவும், அந்த பணியிடத்தில் இருந்த ராஜேந்திரன் சிப்காட் நிலம் எடுப்பு தனி தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதுபோல் துணை தாசில்தார்கள் 15 பேரையும் பணி இடமாற்றம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.


Next Story