யூனியன் அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்


யூனியன் அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Aug 2021 10:36 PM IST (Updated: 6 Aug 2021 10:36 PM IST)
t-max-icont-min-icon

யூனியன் அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொண்டி, 
திருவாடானை யூனியன் அலுவலக வளாகத்தில் ஊரகவளர்ச்சித்துறை அலுவலர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஊரகவளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க தலைவர் ஜெயமுருகன் தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பழனிநாதன், வன்மீகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஊழியர்கள் ராமநாதபுரம் யூனியனில் அலுவலக பணியாளர்களை தரக்குறைவாகவும், பெண் ஊழியர்கள் மத்தியில் தகாத வார்த்தைகளால் பேசிய மாவட்ட கவுன்சிலர் அப்பாஸ் கனியை கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.

Next Story