புவனகிரியில் கொள்ளைமுயற்சியில் ஈடுபட திட்டமிட்ட 5 பேர் கைது


புவனகிரியில் கொள்ளைமுயற்சியில் ஈடுபட திட்டமிட்ட  5 பேர் கைது
x
தினத்தந்தி 6 Aug 2021 10:52 PM IST (Updated: 6 Aug 2021 10:52 PM IST)
t-max-icont-min-icon

புவனகிரியில் கொள்ளைமுயற்சியில் ஈடுபட திட்டமிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனா்.

புவனகிரி, 

புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) குணபாலன், சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் மற்றும் போலீசார் புவனகிரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது, புவனகிரி அருகே உள்ள பெருமாத்தூர் சுடுகாடு அருகே 5 பேர் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்தனர். இதை பார்த்த போலீசார், அவர்களை பிடித்து விசாரித்தனர்.

அதில், கிள்ளை தளபதி நகரை சேர்ந்த சரவணன் மகன்  லட்சுமணன் (வயது 23), கீழமணக்குடி குமாரசாமி மகன் வெங்கடேசன்(44), கீரப்பாளையம் ஆனந்தன் மகன் விக்னேஷ்(26), புவனகிரி லட்சுமிகாந்தன் மகன் மாரிமுத்து(24), முட்லூர் காசிலிங்கம் மகன் மூர்த்தி(21) ஆகியோர் என்பது தெரியவந்தது.  

மேலும்  இவர்கள் 5 பேரும் சேர்ந்து புவனகிரி பகுதியில் கூட்டுக் கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்றது விசாரணையில் வெளியானது. இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story