மலை மாதா ஆலயத்தில் திருவிழா கொடியேற்றம்


மலை மாதா ஆலயத்தில் திருவிழா கொடியேற்றம்
x
தினத்தந்தி 6 Aug 2021 10:54 PM IST (Updated: 6 Aug 2021 10:54 PM IST)
t-max-icont-min-icon

மலை மாதா ஆலயத்தில் திருவிழா கொடியேற்றம்

கீரனூர்,ஆக.7-
கீரனூர் அருகே அம்மாசத்திரம் கிராமத்தில்  மலை மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். நாளை (ஞாயிற்றுக்கிழமை) திருவிழா திருப்பலி நடைபெறுகிறது. காலை 11 மணியளவில் திருச்சி பிஷப் ஆரோக்கியசாமி திருப்பலி வழிபாடு நடத்துகிறார். அதன்பின் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதில் திருச்சி, தஞ்சை மறை மாவட்ட பங்கு தந்தைகள், உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள். கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறையில் இருப்பதால் இரவு நடைபெறும் சப்பர ஊர்வலம் ரத்து செய்யப்பட்டுள்ளது.  நிகழ்ச்சி ஏற்பாடுகளை அம்மாசத்திரம் பங்கு தந்தை ஜேம்ஸ்கென்னடி மற்றும் நண்பர்கள்குழுவினர் செய்து வருகின்றனர். விழாவையொட்டி மலை மாதா ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

Next Story