சிறைக்கைதிகள் உள்பட 194 பேர் பிளஸ் 2 துணைத்தேர்வு எழுதினர்
கோவை மாவட்டத்தில் நேற்று தொடங்கிய பிளஸ்-2 துணைத்தேர்வை சிறைக்கைதிகள் உள்பட 194 பேர் எழுதினர்.
கோவை
கோவை மாவட்டத்தில் தொடங்கிய பிளஸ்-2 துணைத்தேர்வை சிறைக்கைதிகள் உள்பட 194 பேர் எழுதினர்.
பிளஸ்-2 துணைத்தேர்வு
கொரோனா தொற்று 2-வது அலை காரணமாக தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. மேலும் மாணவ-மாணவிகள் 10-ம் வகுப்பு, பிளஸ்-1 மற்றும் செய்முறை தேர்வு உள்ளிட்டவற்றில் எடுத்த மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து பிளஸ்-2 மாணவ- மாணவிகளுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் பிளஸ்-2 தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. மேலும் இவர்களுடன் கூடுதல் மதிப்பெண் பெற விரும்பும் பிளஸ்-2 மாணவ- மாணவிகளும் தேர்வு எழுதலாம் என்று அறிவித்து இருந்தனர். இதன் படி தமிழகம் முழுவதும் பிளஸ்-2 துணைத்தேர்வு தொடங்கியது.
6 மையங்கள்
முதல்நாளான தமிழ், மலையாளம், பிரெஞ்ச் உள்ளிட்ட மொழிப்பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் இந்த பிளஸ்-2 துணைத்தேர்வு எழுத 260 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
இவர்கள் தேர்வு எழுத வசதியாக கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளி, மத்திய சிறைச்சாலை உள்பட 6 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
கொரோனா அச்சம் காரணமாக தேர்வு எழுதியவர்கள், தேர்வறை கண்காணிப்பாளர்கள் உள்பட அனைவரும் முகக்கவசம் அணிந்து இருந்தனர். இந்த தேர்வை 194 பேர் எழுதினர். 66 பேர் தேர்வு எழுதவரவில்லை.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, கோவையில் மத்திய சிறைக்கைதிகள் 10 பேர் உள்பட 194 பேர் தேர்வு எழுதினர் என்றார்.
Related Tags :
Next Story